தமிழகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் நிகழ்ச்சிகள்; முதலிடம் பிடித்த ‘பிக் பாஸ்’: ‘குக் வித் கோமாளி’க்கு இரண்டாவது இடம்

தமிழகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் நிகழ்ச்சிகள்; முதலிடம் பிடித்த ‘பிக் பாஸ்’: ‘குக் வித் கோமாளி’க்கு இரண்டாவது இடம்
Updated on
1 min read

பிக்பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்று ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டிற்கான பிக் பாஸ் போட்டி கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள்.

இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மொத்தம் பதிவான 30 கோடி ஓட்டுகளில், ஆரிக்கு 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. பாலாஜி இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக பிக் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களில் சென்னையில் மட்டுமே 73% சதவீதம் பேர் ஹாட்ஸ்டார் பயன்படுத்துவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியென்றும் ஹாட்ஸ்டார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in