

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'பசங்க 2' திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
சூர்யா, அமலா பால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டாலும், வெளியிட சரியான தேதிக்காக காத்திருந்தார்கள்.
நவம்பர் 27ம் தேதி வெளியிட முயற்சிகள் செய்யப்பட்டு, இறுதியில் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டார்கள். தற்போது, இப்படத்தை கைப்பற்றி இருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், "'பசங்க 2' திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும்" என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள்.