

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா நடித்திருக்கும் 'தங்கமகன்' டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.
வேல்ராஜ், தனுஷ் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. அதே படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தார்கள்.
தனுஷ் உடன் சமந்தா, ஏமி ஜாக்சன், சதீஷ்,ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. சில நாட்களுக்கு முன்பு மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்தது.
இப்படத்துக்கு 'தங்கமகன்' என்று தலைப்பிட்டு இருப்பதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் எப்போது வெளியீடு என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், "டிசம்பர் 18ம் தேதி 'தங்கமகன்' வெளியாகும்" என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். விரைவில் டீஸர், பாடல்கள் என வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.