Published : 22 Jan 2021 02:03 PM
Last Updated : 22 Jan 2021 08:07 PM
சந்தானம் நடித்து வரும் புதிய படத்துக்கு 'சபாபதி' எனப் பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'பிஸ்கோத்' படத்தைத் தொடர்ந்து 'டிக்கிலோனா', 'பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சந்தானம். இந்த இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இதில் 'பாரிஸ் ஜெயராஜ்' முதலில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தந்தை - மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது.
நேற்று (ஜனவரி 21) சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்துக்கு 'சபாபதி' எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக மாதவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுத் தொடங்கியதால், இடைவெளியின்றி தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Happy Birthday My Darling @iamsanthanam You are the best love u
— Arya (@arya_offl) January 20, 2021
Wishing the whole team of #Sabhaapathy a huge success #HBDSANTA#RSrinivasaRao @BaskarArumugam9 @SamCSmusic @onlynikil #ARMohan#CRameshKumar @RKENTERTAINMENT pic.twitter.com/aQhIlu9X3B
Sign up to receive our newsletter in your inbox every day!