

நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாமக்கல் குற்றவியல் நிதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மீது அவதூறு வழக்கு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை காணவில்லை. நாங்கள் வெற்றிபெற்றால் காணாமல் போன தென்னிந்திய நடிகர்சங்கத்தை கண்டுபிடிப்போம் என பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். இது எங்களுக்கு மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. எனவே நடிகர் வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரணை செய்த நீதிபதி மோகனம்பாள், வடிவேல் நவம்பர் 20-ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.