விமர்சகர்களுக்கு விஜய் ஆண்டனி வேண்டுகோள்

விமர்சகர்களுக்கு விஜய் ஆண்டனி வேண்டுகோள்
Updated on
1 min read

சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் ‘கபடதாரி’. நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஜி.தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (18.01.21) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் விஜய் ஆண்டனி பேசியதாவது:

படத்தின் நாயகன் சிபி ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார். படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற
வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான
காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய
படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு விஜய் ஆண்டனி பேசினார்.

‘கபடதாரி’ படம் வரும் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in