

பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இப்படம் திருப்ப்தி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இருக்கும் கடன் பிரச்சினையில் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சிவகார்த்திகேயன், இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். சம்பள பேச்சுவார்த்தை முடிந்து, படப்பிடிப்புக்கான தேதிகள் பேச்சுவார்த்தை மற்றும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தான் நடித்து வரும் 5 படங்களுக்கு இடையே இப்படத்தில் நடிக்க முடியாது என்பதால் ஸ்ருதிஹாசன் விலகிவிட்டார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நவம்பர் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கிறார்