

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மீது தனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்று நடிகர் விஷால் மதுரையில் நேற்று தெரிவித்தார்.
நடிகர் சங்கத் தேர்தல் பிரச் சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது. இந்நிலையில், நாடக நடி கர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் மதுரைக்கு நேற்று வந்தனர். அப்போது, நடிகர் விஷால் செய்தியாளர் களிடம் பேசியதாவது:
என்னைப் பற்றி யார் என்ன பேசி னாலும் கவலைப்பட மாட்டேன். நடிகர் சங்கத் தேர்தல் கண்டிப் பாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே குறிக்கோள். தமிழகம் முழுவதும் நாடக நடி கர்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்கள் பயன்பெற வேண்டும்.
நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் உரிய ஆதாரம் உள்ளது. அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. நடிகர் சங்க விவகாரத்தில் பல தவறுகள் நடந் திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம், பெப்சி போன்ற சங்கங்கள் சமரசத்துக்கு அழைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் கூறினேன். இந்த விஷயத்தில் தமிழக முதல் வரின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றார்.
நடிகர் நாசர் கூறியது: நாடக நடிகர்களுக்கு 6 மாதங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக் கிறது. மற்ற 6 மாதங்கள் வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். எனவே நாடக நடிகர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, அவர்களையும் சினிமாவில் நடிக்க வைப்போம் என்றார்.
நடிகர் கருணாஸ் கூறியது: தயாரிப்பாளர் சங்கத்தில் நான், விஷால், கார்த்தி போன்றோரும் உறுப்பினர்களாக உள்ளோம். ஆனால், எங்களிடம் கேட்கா மலேயே சரத்குமார் அணிக்கு ஆத ரவு என தயாரிப்பாளர் சங்கத்தினர் முடிவெடுத்து விட்டனர். 90 சதவீத வாக்குகள் பெற்று, எங்கள் அணி வெற்றி பெறும் என்றார்.
நடிகர்கள் பொன்வண்ணன், கார்த்திக், வடிவேலு, விக்னேஷ், ஜூனியர் பாலையா, நடிகைகள் கோவை சரளா, குட்டி பத்மினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.