ப்ரியதர்ஷனுடன் இணையும் இளையராஜா

ப்ரியதர்ஷனுடன் இணையும் இளையராஜா
Updated on
1 min read

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்க, படம் தொடங்கப்பட்டது. திட்டமிட்டு குறுகிய காலத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்தை பிரபுதேவா வழங்க இயக்குநர் விஜய் தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு பெயரிடாமல், படப்பிடிப்பு முடிந்தவுடன் பெயரை முடிவு செய்ய திட்டமிட்டார்கள். அதுமட்டுமன்றி, படம் முழுமையாக முடிந்தவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் திரையிட்டு காட்டுவோம். அதனைத் தொடர்ந்து இசையமைக்க அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது இப்படத்துக்கு 'சில சமயங்களில்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்தின் பாடல்கள் குறித்து இளையராஜா முடிவு செய்வார் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in