நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு நாசர், விஷால் மனு

நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு நாசர், விஷால் மனு
Updated on
1 min read

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையாள ரிடம் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் பலர் மனு கொடுத்தனர்.

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் வரும் 18 ம் தேதி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி யும், நடிகர் சரத்குமார் தலைமை யிலான மற்றொரு அணியும் போட்டி யிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, பொன் வண்ணன், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன் ஆகியோர் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலு வலகத்தில் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அசம்பாவிதம் கூடாது

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தேர்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே ஒரு கடிதம் கொடுத்துள்ளோம். தற்போதுள்ள சூழலில் அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்கவும், அனை வரும் பயமின்றி வாக் களிக்கவும், உச்சக்கட்ட பாது காப்பு வழங்குமாறும், தேர்தலை கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in