

நடிகர் சங்கத்தேர்தலில் சரத் குமார் அணிக்கு ஆதரவளிப் பதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது :-
நடிகர்களுக்குள் பிரி வினை ஏற்படாமல் இருக்க இரு அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், பெப்சி உள்ளிட்ட தமிழ்த்திரையுலக கூட் டமைப்பு 2 நாட்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதை நகை யாடும் விதத்தில் பாண்டவர் அணி சார்பில் ஒரு கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர். இது ஆரோக்கியமானதாக இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சரத்குமார் தலைமை யிலான நடிகர் சங்கம் பல் வேறு படங்களின் வெளி யீட்டின் போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. எனவே இந்த அணியை ஆதரிப்பதே சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
இவ்வாறு எஸ்.தாணு கூறினார்.