அக்.25-ல் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம்

அக்.25-ல் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம்
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 25ம் தேதி நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாண்டவர் அணியின் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் என அனைவருமே வெற்றி பெற்றார்கள். செயற்குழு உறுப்பினர்களாக 20 பேர் விஷால் அணியில் இருந்து வெற்றி பெற்றார்கள். சரத்குமார் அணியில் இருந்து 4 பேர் வெற்றி பெற்றார்கள்.

புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் அக்டோபர் 25ம் தேதி நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்தில் பொதுக்குழுவை எப்போது கூட்டுவது, முன்னணி நடிகர்கள் யாரை எல்லாம் அழைக்கலாம் என்பவை உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்க இருப்பதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in