கடினமான காலகட்டத்தில் பிரார்த்தனைகளுக்கும் இரங்கல் செய்திகளுக்கும் நன்றி: ஏ.ஆர்.ரஹ்மான்

கடினமான காலகட்டத்தில் பிரார்த்தனைகளுக்கும் இரங்கல் செய்திகளுக்கும் நன்றி: ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அதற்கு ஒட்டுமொத்தத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

தனது அம்மா காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:

"இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி. உங்கள் அன்பு மற்றும் அக்கறையை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்".

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாளை (ஜனவரி 9) அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in