

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்து நடிகர் விஷால் கூறியதாவது:
மனோரமா அவர்கள் எல்லாரையும் மனதார வாழ்த்துவார்கள். நடிகர்கள் மட்டுமன்றி யாராவது அவரிடம் பேசினார்கள் என்றால் அவர்களையும் மனதார வாழ்த்துவார்கள். அதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
அவர்களை பற்றி பேசுவதற்கு என் வயது பத்தாது. நடிகர் சங்கத் தேர்தல் சம்பந்தமாக சமீபத்தில் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது மறைவு திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆன்மா சாந்திடைய இறைவனை பிராத்திக்கிறேன்.