செல்வராகவன் - தனுஷ் படத்தின் பணிகள் தொடக்கம்

செல்வராகவன் - தனுஷ் படத்தின் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணி சென்னையில் தொடங்கியது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் தனுஷ். கோவிட் பரிசோதனை எடுத்துக்கொண்டு, அதில் நெகட்டிவ் என்பது முடிவானவுடன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்தார். புத்தாண்டுக் கொண்டாட்டம், மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் எனக் குடும்பத்தினருடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் செல்வராகவன் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தனுஷ் படத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், "எனது உலகிற்கு வந்துவிட்டேன். எனது 12-வது படம்" என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் உள்ள மானிட்டரை வைத்துப் பார்த்தால் தனுஷின் லுக்கை இறுதி செய்வதற்கான போட்டோ ஷூட் உடன் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதுபோல் தெரிகிறது.

இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். தாணு தயாரிக்கவுள்ளார். இதில் தனுஷ் உடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in