மனோரமாவை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும்: வைரமுத்து புகழாஞ்சலி

மனோரமாவை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும்: வைரமுத்து புகழாஞ்சலி
Updated on
1 min read

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்து வைரமுத்து கூறியதாவது:

மனோரமா மீது நான் வைத்த நேசமும், மதிப்பும் அதிகம். அவர் யாரையும் புறம் பேசியதில்லை. இதனை இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் நடிக்காத படங்கள் கிடையாது.

அவர் நடித்த படம் பட்டியலிடப்படுவதை விட 1960-70களில் அவர் நடிக்காத படம் தான் பட்டியலிட வேண்டும். அவர் அடைந்த உயரம் இன்னொரு நடிகைக்கு வாய்க்காது. நகைச்சுவை நடிகையாக இருந்தால் காலம் தோறும் பணியாற்றலாம் என கண்ணதாசன் கூறியதை ஏற்று அவர் நடித்தார்.

இது தான் அவரது நீண்ட கால திரை வாழ்வுக்கு சக்தியாக இருந்தது. சமீபத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு திரைப்படம் குறித்து பேசிய போது, அவரது வெட்கப்பட்ட புன்னகை இன்றும் எனது நினைவில் நிற்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in