சிறந்த பன்முக நடிகர் அஜித், சிறந்த நடிகர் தனுஷ்: தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிப்பு

சிறந்த பன்முக நடிகர் அஜித், சிறந்த நடிகர் தனுஷ்: தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிப்பு
Updated on
1 min read

தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னகத்தின் நான்கு திரைத்துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த பன்முக நடிகராக அஜித் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதா சாஹேப் பால்கே அவர்களின் பெயரில் தரப்படும் இந்த விருதுகள், திரைப்பட விருதுகளில் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ல் வெளியான திரைப்படங்களுக்கு 2020ல் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்தானதால் இந்த விருது வழங்கும் விழாவும் ரத்தானது. தற்போது பிப்ரவரி மாதம் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020க்கான வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். முழு பட்டியல் பின்வருமாறு

தமிழ்
சிறந்த நடிகர் - தனுஷ் ('அசுரன்')
சிறந்த நடிகை - ஜோதிகா ('ராட்சசி')
சிறந்த இயக்குநர் - பார்த்திபன் ('ஒத்த செருப்பு சைஸ் 7')
சிறந்த திரைப்படம் - 'டூலெட்'
சிறந்த இசையமைப்பாளர் - 'அனிருத்'
சிறந்த பன்முக நடிகர் - 'அஜித் குமார்'

தெலுங்கு
சிறந்த நடிகர் - நவீன் போலிஷெட்டி ('ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா')
சிறந்த நடிகை - ராஷ்மிகா ('டியர் காம்ரேட்')
சிறந்த இயக்குநர் - சுஜீத் ('சாஹோ')
சிறந்த திரைப்படம் - 'ஜெர்ஸி'
சிறந்த இசையமைப்பாளர் - எஸ் தமன்
சிறந்த பன்முக நடிகர் - நாகார்ஜுனா

கன்னடம்
சிறந்த நடிகர் - ரக்‌ஷித் ஷெட்டி ('அவனே ஸ்ரீமன்நாராயணா')
சிறந்த நடிகை - தான்யா ஹோப் ('யஜமானா')
சிறந்த இயக்குநர் - ரமேஷ் இந்திரா ('ப்ரீமியர் பத்மினி')
சிறந்த திரைப்படம் - 'மூக்கஜியா கனசுகாலு'
சிறந்த இசையமைப்பாளர் - வி ஹரிகிருஷ்ணா
சிறந்த பன்முக நடிகர் - ஷிவராஜ் குமார்

மலையாளம்
சிறந்த நடிகர் - சுராஜ் வென்ஜரமூடு ('ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்')
சிறந்த நடிகை - பார்வதி ('உயரே')
சிறந்த இயக்குநர் - மது சி நாராயணன் ('கும்பளாங்கி நைட்ஸ்')
சிறந்த திரைப்படம் - 'உயரே'
சிறந்த இசையமைப்பாளர் - தீபக் தேவ்
சிறந்த பன்முக நடிகர் - மோகன்லால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in