'அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன்' - போஸ்டர் வெளியீடு

'அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன்' - போஸ்டர் வெளியீடு
Updated on
1 min read

'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 'அந்தகன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் இதர கதாபாத்திரங்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (ஜனவரி 1) புத்தாண்டை முன்னிட்டு, 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கின் தலைப்பை முடிவு செய்து அறிவித்துள்ளது படக்குழு. 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 'அந்தகன்' படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் நாயகி உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in