உங்கள் ஆரோக்கியமே முக்கியம்: ரஜினியின் அரசியல் முடிவு குறித்து லாரன்ஸ் கருத்து

உங்கள் ஆரோக்கியமே முக்கியம்: ரஜினியின் அரசியல் முடிவு குறித்து லாரன்ஸ் கருத்து
Updated on
1 min read

எதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம் என்று ரஜினி அறிவிப்பு தொடர்பாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார். இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

"குருவே, நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரி. எதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம். உங்களை நம்பியவர்களுக்காக நீங்கள் தன்னலமின்றி ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே மற்றவர்களுக்காக அக்கறை காட்டுபவர். அதுதான் உங்களை மிக உயர்ந்த மனிதராக மாற்றுகிறது. என்றும் உங்கள் நல் ஆரோக்கியத்துக்கு ராகவேந்திரரைப் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in