Published : 29 Dec 2020 04:09 PM
Last Updated : 29 Dec 2020 08:57 PM
மாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு அளியுங்கள் என்று ரஜினிக்கு விஜய் மில்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சி தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும் தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தைரியமான முடிவு ரஜினிகாந்த் சார். உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்".
இவ்வாறு விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!