தள்ளுமுள்ளு விவகாரம்: நடிகை சங்கீதா விளக்கம்

தள்ளுமுள்ளு விவகாரம்: நடிகை சங்கீதா விளக்கம்
Updated on
1 min read

சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணியினருக்கும் வாக்குப்பதிவின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஷால் அணியில் இருக்கும் சங்கீதாவால் தான் இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நடிகை சங்கீதா, "இரு தரப்பினருமே அணியின் பிரதிநிதிகள் அடங்கிய சீட்டுகளைக் கொடுத்து வந்தோம். ஒட்டுப் போடும் இடத்துக்குள் போகும் போது விஷால் அணியின் சீட்டை மட்டும் சரத் அணியினர் பிடுங்கினர். 29 நபர்களின் பெயர்களை வாக்களிக்கபவர்களால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.

சரத்குமாருடன் கிச்சா ரமேஷ், சிசர் மனோகர் மற்றும் அவருடைய உதவியாளர் கூடவே இருந்தார்கள். அவர்கள் மூவருக்கும் எங்களது அணியின் சீட்டை பிடுங்குவதையே வேலையாக வைத்துக் கொண்டனர். நான் மறுபடியும் மறுபடியும் கொண்டு போய் கொடுத்ததால் "உன்னை எல்லாம் யார் உள்ளே விட்டது" என்றார்கள். நான் EC மெம்பர் என்று தெரிவித்தேன். அப்போது சரத்குமார் சார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். சரத்குமார் அவர்களால் ஆபத்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

சரத்குமார் என்னை அடிக்க வந்தார். அப்போது விஷால், விக்ராந்த் அனைவரும் என்னை பாதுகாத்து 'இங்கிருந்து நீ கிளம்பு' என்றார்கள். இப்போது சரத்குமார் அணியில் இருக்கும் பெண்கள் எங்களது தலைவனை நீ அடிக்க வந்தியா என்று மாற்றி பேசுகிறார்கள். அந்த இடம் முழுவதும் கேமரா இருந்தது. அதைப் பார்த்தால் என்ன நடந்தது என்ற உண்மை தெரிந்துவிடும். அவர்களது முக்கிய எண்ணமே விஷாலை தாக்க வேண்டும் என்பது தான்.

கிச்சா ரமேஷ் என்பவர் சரத்குமார் கட்சியில் உள்ளவர். அவருக்கு நடிகர் சங்கத்தில் என்ன வேலை?. இந்த மாதிரியான இடத்திலே இருந்தோம் என்று எனக்கு அவமானமாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு பண்பற்ற செயலை ஒரு தலைவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in