Published : 25 Dec 2020 16:01 pm

Updated : 25 Dec 2020 16:01 pm

 

Published : 25 Dec 2020 04:01 PM
Last Updated : 25 Dec 2020 04:01 PM

'கோப்ரா' அப்டேட்: விக்ரமின் புதிய லுக் வெளியீடு

cobra-2nd-look-released

சென்னை

'கோப்ரா' படத்திலிருந்து விக்ரமின் புதிய லுக் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த கெட்டப்கள் அடங்கிய போஸ்டரை தான் படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டது.


இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 'கோப்ரா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி, விக்ரமின் புதிய கெட்டப் கொண்ட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் "ஒவ்வொரு பிரச்சினைக்கும் கணித ரீதியான தீர்வும் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

தற்போது கொல்கத்தாவில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஹரிஷ் கண்ணன், எடிட்டராக புவன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.

தவறவிடாதீர்!


கோப்ராகோப்ரா வெளியீடுகோப்ரா போஸ்டர்விக்ரம்அஜய் ஞானமுத்துகோப்ரா 2-வது போஸ்டர்லலித் குமார்One minute newsCobraCobra releaseCobra posterVikramAjay gnanamuthuLalit kumar

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x