குற்றம் கடிதல் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது

குற்றம் கடிதல் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது
Updated on
1 min read

'குற்றம் கடிதல்' படத்தை இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை முதல்வர் ரங்கசாமி வரும் 16-ம் தேதி அளிக்கிறார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'குற்றம் கடிதல்' படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களிடம் அன்போடு பழக வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு சங்கரதாஸ்சுவாமிகள் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை வரும் 16-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் ரங்கசாமி வழங்க உள்ளார்.

இவ்விருதினை படத்தின் இயக்குநர் பிரம்மா பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in