

விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' திரைப்படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆனந்த்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் 'நானும் ரவுடி தான்'. படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் பாடல்களை ஒவ்வொரு பாடலாக இணையத்தில் வெளியிட்டது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட, இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி வந்தது படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் "அக்டோபர் 21ம் தேதி 'நானும் ரவுடிதான்' வெளியாகும்" என்று அறிவித்திருக்கிறார்கள்.
தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கிறது லைக்கா நிறுவனம். தமிழகம் தவிர இதர இடங்களில் தனுஷின் 'வுண்டர்பார் நிறுவனம்' வெளியிட தீர்மானித்திருக்கிறது.