

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. ஐங்கரன் நிறுவனம், உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
இறுதிகட்டப் பணிகள் முடித்து, இசை வெளியீடு உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து படத்தை 2016ல் பொங்கலின்போது வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது ஐங்கரன் நிறுவனம்.
சூர்யா நடிப்பில் தயாராகி வரும் '24' படத்தைத் தொடர்ந்து 'தாரை தப்பட்டை' படமும் தங்களது பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.