திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது காட்டேரி

திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது காட்டேரி
Updated on
1 min read

ஓடிடி வெளியீட்டிலிருந்து திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளது 'காட்டேரி' திரைப்படம்.

'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால், ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பல்வேறு ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், எதுவும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. இறுதியாக, திரையரங்க வெளியீட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டது 'காட்டேரி' திரைப்படம்.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக 'காட்டேரி' வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தம் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in