கதைகள் கேட்கும் பணிகள் தொடக்கம்: நடிகராகும் விஜயகாந்தின் மூத்த மகன்

கதைகள் கேட்கும் பணிகள் தொடக்கம்: நடிகராகும் விஜயகாந்தின் மூத்த மகன்
Updated on
1 min read

இளைய மகனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அரசியலில் கவனம் செலுத்தியதால், படங்களில் நடிப்பதைக் குறைத்தார். தற்போது தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திரையுலகில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்.

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகமானார். 'சகாப்தம்', 'மதுரை வீரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது புதிய படமொன்றில் நடித்து வருகிறார். சண்முக பாண்டியனைத் தொடர்ந்து, மூத்த மகன் விஜய பிரபாகரனும் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கான கதைகள் கேட்கும் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. பாட்மிண்டன் அணி, நாய்களுக்கான போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, தேமுதிக கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார் விஜய பிரபாகரன். அவற்றைத் தொடர்ந்து நாயகனாக நடிக்க உடலைக் குறைத்து, போட்டோ ஷூட் எடுத்துத் தயாராகியுள்ளார்.

நாயகனாக நடிப்பதற்கு முன்னோட்டமாக 'என் உயிர்த் தோழா' என்ற பாடலைப் பாடி நடனமாடி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in