

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் மலேசிய படப்பிடிப்பு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி துவங்கி ஒரு மாதம் நடைபெறவுள்ளது.
'மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி' படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். 'கலைப்புலி' தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் மலேசிய படப்பிடிப்பு நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது வெறும் ஒரு மாதம் மட்டும் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. மீதமுள்ள படப்பிடிப்பு சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடைபெறும்.
தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் தற்போது 'மெட்ராஸ்' படத்தில் நடித்த ரித்விகாவும் எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
2016-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.