

சசிகுமார் நாயகனாக நடிக்கும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஜெய், நஸ்ரியா நடிப்பில் உருவான படம் 'திருமணம் என்னும் நிக்காஹ்'. அனிஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2014-ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையினை எழுதி வந்தார் அனிஸ்.
இந்தக் கதையைக் கேட்ட சசிகுமார் உடனடியாக தேதிகள் ஒதுக்கினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'பகைவனுக்கு அருள்வாய்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.
வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக கார்த்திக் கே.தில்லை, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.