நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான்: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு போலீஸார் தகவல்

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான்: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு போலீஸார் தகவல்
Updated on
1 min read

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்றும்,அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடையதுதான் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் உள்ளதந்தை வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

இதற்கிடையில், சித்ராவின் மரணம் கொலையா, தற்கொலையா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கன்னத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடையதுதான். அவரதுகையிலேயே அதற்கான தடயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளன. தூக்குப்போட்ட நிலையில்,கழுத்தை துணி இறுக்கும்போதுசெய்வதறியாமல் இதுபோல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, தன் மகள் கோழைஅல்ல. அவரை கொன்றுவிட்டனர்என்று சித்ராவின் தாயார் உணர்வுபூர்வமாக கூறியிருந்தார். இதனால்,இந்த வழக்கு தொடர்பாக சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சக நடிகர், நடிகைகள், உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in