ஹாலிவுட் தரத்துக்கு இணையானது புலி- ரஜினி பாராட்டு

ஹாலிவுட் தரத்துக்கு இணையானது புலி- ரஜினி பாராட்டு
Updated on
1 min read

விஜய் நடித்துள்ள 'புலி' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளதாக தனது பாராட்டில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்து, சிம்புதேவன் இயக்கத்தில் உருவான 'புலி' கடந்த வாரம் வெளியானது. படம் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லையென்றாலும், ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. புலி படத்தைப் பார்த்த பிரபலங்கள் சிலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், புலி படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

"புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team"

இவ்வாறு ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in