தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: கமல் ஹாசன்

தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: கமல் ஹாசன்
Updated on
1 min read

தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் பரம்பரியமானது. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுப்படுத்தக் கூடாது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும், நடிகர்களுக்கென்று ஒரு கட்டிடம் இருக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் என் மூத்த கலைஞர்களால் கட்டப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் கட்டிடம் வரும். தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது'' என்று கமல் ஹாசன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in