பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ் உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் 'சரவணன் மீனாட்சி (சீசன் 2)' சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2018-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இந்நிலையில் இன்று (09.12.2020) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in