

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்து நடிகர் சிவகுமார் கூறியதாவது:
திறமையும் கடுமையான உழைப்பும் இருந்தால் நாம் எங்கு பிறக்குகிறோம் என்பது முக்கியமே இல்லை. எவ்வளவு பெரிய பாதாளத்தில் இருந்தாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை தொட முடியும் என்பதற்கு உதாரணம் மனோரமா அம்மையார். திருஞானசம்பந்தம் போல மனோரமா குழந்தையாக இருக்கும் போதே ஞானத்தை கொடுத்துவிட்டான்.
நாடகத்தில் எந்த வேடம் கொடுத்தாலும் செய்ய கூடிய திறமையான பெண்மணி கோபி சாந்தா என்ற மனோரமா. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் கதாநாயகனாக எந்தளவுக்கு உச்சம் தொட்டார்களோ, அதே போல உலகளவில் நகைச்சுவையில் இவரைப் போல் வேடங்கள் பண்ணியது யாருமே இல்லை. இனிமேல் வரப்போவதும் இல்லை.