

'கோ' கூட்டணியான இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் ஜீவா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
'அனேகன்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையை முடித்தவுடன், பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதையைக் கூறிவந்தார்.
அஜித்தில் தொடங்கிய இவருடைய பயணம் ஆர்யா வரை நீண்டது. தேதிகள் பிரச்சினை, தயாரிப்பாளர்களின் வேண்டுகோள், தயாரிப்பாளர் மாற்றம் இப்படி ஒவ்வொரு கட்டமாக நீண்டது. தற்போது இறுதியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பது உறுதியாக இருக்கிறது.
கே.வி.ஆனந்த், ஜீவா இருவருமே 'கோ' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் கதையைக் கேட்டவுடன், ஜனவரியில் தேதிகள் தருகிறேன் என்று உத்ரவாதம் அளித்திருக்கிறாராம் ஜீவா. இப்படத்தை 'கோ' படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.