ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கங்கள்

ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கங்கள்
Updated on
1 min read

வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டன.

சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் பிரபலங்களில் முக்கியமானவர் வரலட்சுமி சரத்குமார். பாலியல் வன்முறை, கரோனா விழிப்புணர்வு, சக்தி அமைப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார். நேற்றிரவு (டிசம்பர் 2) வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கத்தை விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.

இதனால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு திருடப்பட்டு விட்டன. என்னால் இன்னும் அவற்றை மீட்க முடியவில்லை.

கூடிய விரைவில் என்னுடைய கணக்குகளை மீட்பதற்காக அந்தத் தளங்களின் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆகலாம்.

என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் அடுத்த சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களிலிருந்து மெசேஜ் வந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும்.

என்னுடைய கணக்குகளை மீட்டதும் நான் அதை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன்".

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in