

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவித்தார்கள்.
படத்தின் நாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் உள்ளிட்ட சில இந்தி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஷங்கர். இந்நிலையில், தற்போது படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
ஷங்கரின் முந்தைய படமான 'ஐ' படத்திலும் ஏமி ஜாக்சன் தான் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மேற்பார்வையாளராக ஸ்ரீனிவாஸ் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.