

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்து லாரன்ஸ் கூறியதாவது:
மனோரமாவின் இழப்பு சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு. கடவுள் அனைவரையும் ஏதோ ஒரு காரணத்துக்காக படைப்பார். என்னைப் பொறுத்தவரை பெண்களால் காமெடி பண்ண முடியும், 1100 படங்களுக்கு மேல் நடிக்க முடியும், சாதிக்க முடியும் இப்படி சாதிப்பதற்காகவே மனோரமாவை கடவுள் படைத்திருக்கிறார்.
இன்றைக்கு வரும் புது நடிகைகள் கூட மனோரமா தூண்டுகோளாக நினைக்கிறார்கள். கடவுள் கொடுத்த வேலையை ஆணவம் இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக செய்துவிட்டு அமைதியாக படுத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது.