இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு காலத்தின் கட்டாயம்: நடிகர் சதீஷ்

இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு காலத்தின் கட்டாயம்: நடிகர் சதீஷ்
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி நடராஜன் இந்திய அணியில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம் என நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. மேலும் இரண்டு போட்டிகளிலுமே அளவுக்கு அதிகமான ரன்களை பவுலர்கள் வாரி வழங்கியுள்ளனர். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசிய டி நடராஜன் சுற்றுப்பயண அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இறுதி 11 பட்டியலில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே வரும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் பக்கம், நடராஜனை அடுத்த போட்டியில் அணியில் எடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பயனர்களிடம் ட்விட்டரில் கேட்டிருந்தது. இதற்கு நடிகர் சதீஷ் "நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் பட வேண்டும். திறமை மற்றும் காலத்தின் கட்டாயம்" என்று பதிலளித்துள்ளார். இதற்கு அவரைப் பின் தொடர்ந்து வரும் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in