போஸ்டர்களில் நாயகியின் பெயர்: ஆத்மிகா கேள்வி

போஸ்டர்களில் நாயகியின் பெயர்: ஆத்மிகா கேள்வி
Updated on
1 min read

போஸ்டர்களின் நாயகியின் பெயர் ஏன் இடம்பெறுவதில்லை என்று ஆத்மிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து இமாலய சாதனையை நிகழ்த்தியது 'ரவுடி பேபி' பாடல். இதனால் படக்குழுவினர் உள்ளிட்ட அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தக் கொண்டாட்டத்துக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்கள், ட்வீட்கள் என அனைத்திலுமே சாய் பல்லவியைச் சேர்க்கவில்லை. இதனால் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.

அதோடு படத்துக்கு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைத்திலுமே நாயகன் பெயர் மட்டுமே இடம்பெறும். முன்னணி நாயகியாக இருந்தால் மட்டுமே போஸ்டர்களில் பெயர் இடம்பெறும்.

இந்நிலையில், தற்போது ஆத்மிகா தனது ட்விட்டர் பதிவில் "ஏன் நாயகியின் பெயர் என்றுமே போஸ்டர்களில் இடம்பெறுவதில்லை என்று நான் எப்போதும் யோசித்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய கேள்விக்குப் பலரும் சரியான கேள்விக்கு எனத் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in