

சூர்யா நடித்துவரும் '24' படத்தை பொங்கலுக்கு வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது,
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. சமீபத்தில் போலந்து நாட்டுக்கு சென்று பாடல்கள் மற்றும் சில காட்சிகளை படமாக்கிவிட்டு திரும்பினார்கள். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன.
இப்படத்தின் விநியோக உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. ஸ்வப்னம் பிலிம்ஸ் கேரளா உரிமையையும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதினும் வாங்கியிருக்கிறார்கள். கர்நாடகா உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தினை 2016 பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை எந்த ஒரு படமும் பொங்கல் வெளியீடு என முறையாக அறிவிக்காததால் முதல் ஆளாக களத்தில் இறங்க இருக்கிறார்கள்.