

'வேதாளம்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இப்படத்தின் மொத்த உரிமையையும் ஆளும் கட்சி தரப்பினர் ஒருவர் பெரும் விலைக் கொடுத்து வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து, சென்சார் அதிகாரிகளுக்கு படத்தைத் திரையிட்டு காட்டினார்கள். எந்த ஒரு இடத்திலும் கட் கொடுக்காமல், 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்.
சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தை வெளியிடும் பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.