நடிகை சனா கான் திடீர் திருமணம் 

நடிகை சனா கான் திடீர் திருமணம் 
Updated on
1 min read

நடிகை சனா கானுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதற்குப் பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மெர்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக புகைப்படங்களுடன் அறிவித்தார். நடப்பாண்டு தொடக்கத்தில் மெர்வின் லூயிஸைப் பிரிந்துவிட்டதாக அறிவித்து, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக திரையுலகை விட்டு விலகுவதாக சனா கான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான படங்களும், காணொலிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சூரத் நகரில் நடைபெற்ற இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சனா கானுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in