

நானி - நஸ்ரியா இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'அன்டே சுந்தரானிகி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
2019-ம் ஆண்டு வெளியாகி தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ப்ரோசேவாரெவருரா'. பல்வேறு மொழிகளில் ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நானி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூலமாகவே தெலுங்கில் அறிமுகமாகிறார் நஸ்ரியா.
இன்று (நவம்பர் 21) விவேக் ஆத்ரேயா - நானி படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'அன்டே சுந்தரானிகி' என்று தலைப்பிட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த தலைப்பை அறிவிக்க வெளியிடப்பட்டுள்ள டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.