கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீட்டில் எம்ஜிஆர் மகன்

கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீட்டில் எம்ஜிஆர் மகன்

Published on

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று, வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு என்று முன்பு திட்டமிட்டது. ஆனால், திரையரங்குகள் திறப்பு தாமதத்தால் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. தீபாவளி அன்று ட்ரெய்லரை மட்டும் வெளியிட்டது.

இந்நிலையில், 'எம்ஜிஆர் மகன்' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அது சுமுகமாக முடியும் தருவாயில் டிசம்பர் 25-ம் தேதி 'எம்ஜிஆர் மகன்' வெளியாகும்.

இதில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, இசையமைப்பாளராக அந்தோணி தாசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in