

வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட அதிமுக வைச் சேர்ந்த நடிகர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி களுக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய தலைவர் சரத் குமார், ராதாரவி தலைமையில் ஓர் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியில் இறங்கியுள்ளன.
இரு அணிகளுக்கும் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக தற்போதைய தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சூழலில் நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் சாயம் கலப்பதை ஆளும் அதிமுக விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக விவாதிக்க அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நிர்வாகிகள் கூட்டம் நடந்த தாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ள தாக தெரிகிறது. எந்த அணிக்கு வேண்டுமானாலும் வாக்களிக் கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட அணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அதிமுகவைச் சேர்ந்த நடிகர்களை கட்சித் தலைமை கேட்டுக் கொண் டுள்ளதாகக் கூறப்படுகிறது.