

'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 'மருது' படத்தின் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'சூது கவ்வும்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் ’ஸ்டூடியோ நைன்’ சுரேஷ்.
பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் 'தாரை தப்பட்டை' படத்தில் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படத்தைத் தொடர்ந்து 'குட்டிப்புலி', 'கொம்பன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில், விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
'மருது' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.