

நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை நுழைத்துவிட்டனர் என்று எதிரணி யினர் மீது நடிகர் ராதாரவி குற்றம் சுமத்தினார்.
கரூரில் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் அவர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது ராதாரவி பேசியது: நிறைய ஹீரோக்கள் உள்ள எதிரணியினரால் ஒரு வில்லனை சமாளிக்க முடியவில்லை. அந்த அணியில் உள்ள ஒருவர், ‘எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட இல்லை’ என்கிறார். ஆனால், எம்.ஆர்.ராதா தான் நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நாடகம் நடத்தி, நிதி சேகரித்தார்.
நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை நுழைத்துவிட்டனர். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள். நாடக நடிகர்கள் சுயமரியாதை உடையவர்கள். அதனால் தான், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக அந்த பராம்பரியத்தில் வந்தவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
நாடக நடிகர்களை மட்டும் நேரில் சந்தித்து, வாக்கு சேகரித்தால் போதுமானது. ஆனால், விஷால் அணியினர், நாடக நடிகர்களை சந்திக்கச் செல்லும்போது, ஆயிரக் கணக்கான ரசிகர்களையும் சேர்த் துக் கொண்டு கூட்டம் கூட்டுகி றார்கள். இதனால் யாருக்கு லாபம். நடிகர் சங்கத் தேர்தலை போராக மாற்றிவிட்டனர். நடிகர் களுக்கு நன்மை கிடைக்க, எங்கள் அணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.