

தோல்வி பீதி காரணமாக விஷாலை தாக்கி இருக்கிறார்கள். சரத்குமார் மீது புகார் கொடுப்பது குறித்து மாலை முடிவு செய்வோம் என்று வடிவேலு கூறியுள்ளார்.
விஷால் தாக்கப்பட்டது குறித்து வடிவேலு பேசியதாவது:
''நடிகை சங்கீதாவை தரக்குறைவாக பேசினார் சரத்குமார். அதை தட்டிக் கேட்டார்கள் விஷால் அணியினர். அப்போது சரத்குமார் அணியில் இருந்த தாடி வைத்த ஒருவர் விஷாலின் சட்டையை பிடித்து தள்ளினார்கள். அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
தேர்தலை நிறுத்த சரத்குமார் அணியினர் திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. போலீஸார் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஊடகங்கள் உண்மையை நிலையை வெளியே கொண்டுவர வேண்டும். காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது. தோல்வி பீதி காரணமாக இப்படி செய்கிறார்கள். சரத்குமார் மீது புகார் கொடுப்பது குறித்து மாலை முடிவு செய்வோம்.
இது குறித்து சரத்குமார் தரப்பில் டி.பி.கஜேந்திரன் பேசிய போது, "நடிகை சங்கீதா தான் தரக்குறைவாக பேசினார். பதிலுக்கு சரத்குமார் பேசினார்." என்று தெரிவித்தார்.