

மலேசியாவில் 75% 'கபாலி' படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கிஷோர், ருத்விகா, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து படக்குழு மலேசியாவுக்கு சென்றிருக்கிறது. அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
மலாகா கவர்னர் மாளிகையில், கவர்னரைச் சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அப்போது அங்குள்ள பணியாளார்கள் உள்ளிட்ட சிலர் ரஜினியோடு புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அப்போது ப்ரஷாத்தி ஜே.நாத் என்பவரும் கவர்னர் மாளிகையில் இருந்திருக்கிறார்.
'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஜே.நாத் அளித்துள்ள பேட்டியில், "மலேசியாவுக்கு 1970-களில் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறேன். தற்போது எனக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது என்று ரஜினிகாந்த் கவர்னரிடம் தெரிவித்தார்.
'கபாலி' படப்பிடிப்பு மலேசியாவில் 75% நடைபெற இருக்கிறது என்று நான் பேசியதுபோது ரஜினிகாந்த் குறிப்பிட்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.